இன்று மீண்டும் ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வு !

by Lankan Editor
0 comment

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள இரண்டு கட்டளைகள் மீதான விவாதங்கள் இன்று இடம்பெறவுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தை கருத்திற் கொண்டு கூட்டத்தொடருக்கான நேரத்தை இரண்டு மணித்தியாலங்களாக வரையறுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தடன் பாராளுமன்ற பணிக்குழுவினரின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மாத்திரமே பாராளுமன்ற வளாகத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கும் இன்று பாராளுமன்ற அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Related Posts

Leave a Comment