இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

by Web Team
0 comment

இளம் இசையமைப்பாளரான நவீன் சங்கர் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விசிறி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நவீன் சங்கர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக திகழும் நவீன் சங்கருக்கு, கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் கூறப்படுகிறது.

இவர் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடித்துள்ள ‘உன் காதல் இருந்தால்’ படத்திற்கும் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment