மிரண்டு போன ஸ்டோக்ஸ்! ஆட்டத்தையே மாற்றிய தமிழன் தினேஷ் கார்த்திக் கேட்ச்: வெளியான வீடியோ

by Web Team
0 comment

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில், கொல்கத்தா 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் கொல்கத்தா அணி தன்னுடைய பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால், அதில் இருக்கும் முடிவுகள் பின்னரே கொல்கத்தா தகுதி பெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

இந்நிலையில், இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அற்புதமான கேட்ச் மூலம், அதிரடி மன்னன் பென் ஸ்டோக்ஸை வெளியேற்றியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரை ஸ்டோக்ஸ் அடித்து ஆட முற்பட, ஆனால் பந்தானது பேட்டின் விளிம்பில் பட்டு, கீப்பரிடம் இருந்து சற்று தூரம் சென்றது. அப்போது யாரும் எதிர்பாரத வகையில், தினேஷ் கார்த்திக் பறந்து கேட்ச் பிடித்தார்.

இதைக் கண்ட பென் ஸ்டோக்ஸ் மிரண்டு போய் பவுலியன் திரும்பினார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த கேட்ச் தான் ஆட்டத்தையே மாற்றியது என்று கூறலாம், ஸ்டோக்ஸ் ஒரு வேளை நின்றிருந்தால், வெளுத்து வாங்கியிருப்பார்

Related Posts

Leave a Comment