இலங்கையில் 22 வது கொரோனா மரணம் – 27 வயதான இளைஞன் உயிரிழப்பு

by Web Team
0 comment

இலங்கையில் 22ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.

பாணந்துறையை சேர்ந்த 27 வயதான இளைஞன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை காரணமாக அவர் உயிரிழந்த போதும், அவரது உடலில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Posts

Leave a Comment