மூச்சு விட திணறிய இளவரசர்… பதறிய குடும்பத்தினர்: கொரோனா தொற்றை இரகசியமாக வைத்துக்கொண்டதன் பின்னணி

by Web Team
0 comment

பிரித்தானிய இளவரசர் வில்லியம் (38), கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு விடவே திணறும் நிலைக்கு சென்றதாகவும், ராஜ குடும்பத்தார் பதறிப்போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில், பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பின், அதாவது ஏப்ரல் மாதத்தில் வில்லியமுக்கு கொரோனா தொற்றியுள்ளது.

அப்போதுதான் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், வில்லியமுடைய தந்தை இளவரசர் சார்லசுக்கும் கொரோனா தொற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

இத்தகைய ஒரு சூழலில் தனக்கும் கொரோனா தொற்று தாக்கியிருப்பதை சொல்லி மக்களை அச்சுறுத்தவேண்டாம் என்பதற்காகத்தான் வில்லியம் தனக்கு கொரோனா தொற்றிய விடயத்தை ரகசியமாக வைத்துக்கொண்டாராம்.

Credit: Getty

தனக்கு கொரோனா தொற்று என்ற விடயத்தைவிட, நாட்டில் முக்கியமான விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்ற கருத்தைக் கொண்ட வில்லியம், தனக்கு கொரோனா தொற்றியபின், யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது என்ற உண்மையை நன்றாக புரிந்துகொண்டதாக தெரிவிக்கிறார்.

ஆகவே, இந்த இரண்டாவது ஊரடங்கை நாம் அனைவரும் சீரியஸாக எடுத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Credit: Getty

Related Posts

Leave a Comment