ஐஸ்வர்யங்களை தரும் ஐப்பசி கிருத்திகை!

by Web Team
0 comment

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி மாதத்தில் அழகு முருகனின் நட்சத்திரம் விசாக நட்சத்திரம் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன். முருகப்பெருமானுக்குரிய, கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.

“ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்|”

இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரமான இன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவிலில் 9 முறை பிரதிட்சணம் வரவேண்டும். இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்து, நம் யோகங்களையும் பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.

-வித்யா ராஜா

Related Posts

Leave a Comment