எல்லோருக்கும் 10 மாதம்; எங்களுக்கு 11 மாதம்… பார்த்திபன்

by Web Team
0 comment

பொதுவா எல்லோரும் 10-வது மாதம் பிறக்க, நாங்கள் 11-வது (நவ)மாதம். பிறப்பிலும் வளர்ப்பிலும் 10 % , மீதம் யாவும் கடின உழைப்பும் முயற்சியுமே! என்று நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். கூடவே ஷாருக்கான், கமல்ஹாசன், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா போன்றோரின் படத்துடன் தன் படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

அத்தனை பேரும் இம்மாதம் பிறந்தவர்கள் என்பதைத்தான் அவர் அவ்வாறு டுவிட் செய்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கான் இன்று 2.11.2020 தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். உலக அழகி ஐஸ்வர்யாராய் நேற்று 1.11.2020ல் 47வது பிறந்தநாளை கொண்டாடினார். உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 7.11.2020ல் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதே நாளில் நடிகை அனுஷ்காவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தங்களது பிறந்தநாளை கொண்டாவிருக்கின்றனர்.

பார்த்திபன் 15.11.2020ல் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகை நடிகை நயன்தாரா 18.11.2020ல், விவேக் 19.11.2020ல் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment