மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவன் அஜித். இவர் தெரு நாய்களை அரவணைத்து தினமும் உணவளித்து வருகிறார்.
150க்கும் மேற்பட்ட நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு தினமும் வழங்கி ஜீவகாருண்ய சேவையை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு விதவித உணவுகள் கொடுத்து நாம் பராமரிக்கிறோம். ஆனால் தெரு நாய்கள் உணவுக்காக அலைவது எனக்கு வேதனையை அளித்தது.
அதனால், வீட்டின் அருகேயுள்ள தெரு நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். அத்துடன் அந்த நாய்களை பராமரிக்கிறேன்.
என் வீட்டு நாயும் அவைகளுடன் அன்பாக பழகி வருகிறது. இந்நிலையில் நகருக்குள் உள்ள தெரு நாய்களை தேடி ஒரு நாள், ஒரு வேளை உணவு வழங்க திட்டமிட்டேன்.
நண்பர்கள் சித்தார்த், அருண் பாண்டியன் உதவியுடன் மஞ்சள், உப்பு போட்டு நன்றாக வேக வைத்த சிக்கனுடன் வெள்ளை சாதம் கலந்து ஸ்பெஷல் உணவு கொடுக்கிறேன்.
அதை விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், அய்யர்பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாய்களுக்கு கொடுத்தாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு வாரமும் இதை தொடர உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தங்களுடன் இணையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.