சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் : முதல் நாளிலேயே நிறைவு பெற்ற ஆன்லைன் முன்பதிவு!

by Web Team
0 comment

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனதற்கான ஆன்லைன் முன்பதிவு முதல் நாளிலேயே நிறைவு பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா நோய் தொற்றால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்படி வருகின்ற பதினாறாம் தேதி மகரவிளக்கு பூஜை ஒட்டி 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இதை தொடர்ந்து அதற்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் முறை நேற்று முதல் ஆரம்பமானது. ஆனால் ஒரே நாளில் சீசன் முழுமைக்கும் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதனால் சபரிமலையில் கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment