இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா : யார் யார் நாமினேட் செய்தார்கள் தெரியுமா?

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அர்ச்சனா வந்து இணைய ரேகா வெளியேறினார். பின்னர் நேற்றைய போட்டியில் வேல்முருகன் வெளியேற பாடகி சுசித்ரா வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் மீண்டும் 16 போட்டியாளர்களுடனேயே போட்டிகளம் செல்கிறது.


இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நாமினேஷன் ப்ராசஸில், அர்ச்சனா, பாலா, ஷிவானி, சோம், சம்யுக்தா ஆகியோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் ஆரி, அனிதா, ஷனம், சுசித்ரா என பலரும் அர்ச்சனாவை நாமினேட் செய்கின்றனர். இதில் அனிதா முன்பு இருந்த அர்ச்சனா போல் அவர் இல்லை என்றும் ஆரி அவர் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment