12 வயது சிறுமியை வேட்டையாடிய 60 வயது மனித மிருகம்!

by Lifestyle Editor
0 comment

குவஹாத்தி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவரை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.

எவ்வளவு தான் தண்டனைகள் கடுயைமாக்கியானாலும் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. வயதானனவர்கள் கூட பச்சிளம் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்யும் கொடுமையும் அதிக அளவில் இந்தியாவில் நடக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை 60வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் பைதலாங்சோ காவல் சரகத்திற்கு உட்பட்ட அத்கான் தமுல்பாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புனிம் தாஸ் (60 வயது). இதேபோல் 12 வயது பெண் தன் பெற்றோருடன் அதே ஊரில் வசித்து வந்தார்.

நேற்று மாலை சிறுமியின் தாயார் வேலையை வெளியில் சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த புனிம் தாஸ், யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துளளார்.

இதனிடையே வீட்டிற்கு வந்த தாய், தனது மகளின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பைதலாங்சோ காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் முதியவர் புனிராம் தாஸை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

Related Posts

Leave a Comment