பிரித்தானியாவில் மீண்டும் 4 வாரங்களுக்கு பொது முடக்கம்

by Editor
0 comment

பிரித்தானியாவில் 4 வாரங்களுக்கு தேசிய அளவிலான முடக்கலை அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தேசிய முடக்கல் அமுல்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன.

கல்வி மற்றும் உடற்பயிற்சி தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் வீடுகளில் இருந்து வௌியேற அனுமதிக்கப்படவுள்ளனர்.

எவ்வாறாயினும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பப்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் , பொழுதுபோக்கு நிலையங்கள் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2 அம் திகதி புதன்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் என கூறப்படுகின்றது.

 

 

 

Related Posts

Leave a Comment