சிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் !!

by Web Team
0 comment

ஒரு சிலருக்கு உடலில் இருக்கின்ற நிண நீர் சுரப்பிகளின் அதீத உணர்வு தன்மையாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமைக்கு உடனடி நிவாரணம் கொடுக்காத பட்சத்தில் உடல்நலத்தை கடுமையாக பாதிக்க செய்கிறது.

ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சான் வேரைக் காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், சீக்கிரத்தில் வாந்தி ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படுத்திய நஞ்சுதன்மை வெளியாகும்.

சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி உணர்வு தூண்டப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

சிறுகுறிஞ்சான் இலைகள் அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 டீஸ்பூன் அளவு தூளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச நோய்கள் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீரவும், சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள், அத்துடன் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.

மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் நரம்புகள் தளர்ந்து நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

Related Posts

Leave a Comment