பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பாடகி சுசித்ரா

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சென்ற வாரம் பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு மொத்தம் 11 பேரை நாமினேட் செய்தனர். மேலும் நேற்று இதில் ரியோ, ரம்யா, அனிதா, பாலாஜி, ரமேஷ் உள்ளிட்ட 5 நபரை மக்கள் காப்பாற்றியுள்ளதாக கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மேலும் கமலிடம் சுசித்ரா “மற்ற சீசன்களை விட இந்த சீசன் ரொம்பவே கடினமாக உள்ளது” என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment