சூப்பரான சுவையான இளநீர் தம் பிரியாணி ரெடி

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

கொங்கு இளநீர் – 5,
சீரக சம்பா – 1/2 கிலோ
சிக்கன் – அரை கிலோ
வெண்ணெய் – 2 தேக்கரண்டி,
வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 10,
இஞ்சிப் பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் – 100 கிராம்,
உப்பு – சிறிது,
கொத்தமல்லி – சிறிது,
சீரகம் – 1 தேக்கரண்டி,
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி,
பட்டை – சிறிது,
ஏலக்காய், கிராம்பு – தலா 4,
பிரியாணி இலை – சிறிதளவு.

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.

அடுத்து தக்காளி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து சிக்கன் வேகும் வரை சமைக்கவும்.

இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் மூடி தணலில் தம் போடணும். (முன்பே அடுப்பு கரியில் தணல் போட்டு வைக்கவும்.

இருபது நிமிடங்கள் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான இளநீர் தம் பிரியாணி ரெடி.

Related Posts

Leave a Comment