சுவையான நூடுல்ஸ் பான் கேக் ரெடி

by Editor
0 comment

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – ஒரு கப்,
பிளெய்ன் நூடுல்ஸ் – அரை பாக்கெட்,
கேரட் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
வெங்காயம் – ஒன்று
இட்லி மிளகாய்ப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 50 கிராம்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நூடுல்ஸை வேகவிட்டு, வடிகட்டி, ஆறியபின் தோசைமாவில் சேர்க்கவும்.

துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

சூடான தவாவில் ஒன்றரை கரண்டி மாவை கனமான ‘பேன் கேக்’ ஆக ஊற்றவும்.

எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு மேலே சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடி தூவவும்.

தேங்காய் சட்னி, புதினா/கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Related Posts

Leave a Comment