3டி பிரின்டரை பயன்படுத்தி உலகின் மிகச்சிறிய படகு

by Lifestyle Editor
0 comment

லெய்டென்:

நெதர்லாந்தின் லெய்டென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, மனித உடலுக்குள் பயணிக்கக்கூடிய நேனோ அளவில் நீந்தி செல்லும் வடிவங்களை உருவாக்குவது சாத்தியமா? என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக, இதனை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக உலகின் மிகச்சிறிய படகை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 3டி பிரின்டரைப் பயன்படுத்தி படம்பிடித்து, அதன் அடிப்படையில் வெறும் 30 மைக்ரோ மீட்டர் நீளத்தில் குட்டிப் படகை உருவாக்கி உள்ளனர்.

இந்த படகானது “பெஞ்சி” படகின் ஒரு சிறிய நகலாகும். இந்தப் படகின் குறுக்களவு மனித தலைமுடியைவிட சிறியது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

சாதனைக்காக மட்டும் இந்த குட்டிப் படகு உருவாக்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் பிற திரவங்களில், வேதிவினை மூலம் வேகமாக நீந்தும் நேனோ வடிவங்களை உருவாக்கும் சோதனையின் ஒரு பகுதி தான் இது.

Related Posts

Leave a Comment