காதலனை தேடி சென்னைக்கு படையெடுத்த ஊட்டி பெண்

by Lifestyle Editor
0 comment

ஊட்டி: என் காதலன் நிச்சயம் வருவான்.. என்னை கூட்டிகிட்டு போவான் என மணமேடையில் மணமகன் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதை தடுத்து நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஊட்டி இளம்பெண் பிரியதர்ஷணிக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. தனக்கு வாக்குறுதி அளித்தபடி தன்னை வந்து அழைத்துச் செல்லாத காதலனை தேடி சென்னைக்கு பஸ் ஏறி இருக்கிறார் பிரியதர்ஷணி.

“நீ நிச்சயம் திரும்பி வருவ… உனக்காக இந்த மயிலு வாழ்நாள் முழுவதும் காத்துகிட்டு இருப்பா…” இதை திரும்ப திரும்ப ஒலிக்கவிட்டு 16 வயதினிலே திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜா முடித்திருப்பார். அந்த மயிலும் சப்பாணியும் தமிழகத்தின் பட்டி தொட்டியை 43 ஆண்டுகாலமாக இன்னமும் ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது மிகை இல்லாததுதான்.

16 வயதினிலேயே திரைப்படத்தில் மயிலுவை கோபாலிடம் இருந்து பிரித்த பாரதிராஜா, கிழக்கே போகும் ரயிலில் பரஞ்சோதியிடம் பாஞ்சாலியை சேர்த்துவைத்தார். ஊட்டி இளம் பெண் ஒருவர் மயிலுவா? பாஞ்சாலியா? என பரிதவிக்கிற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஊட்டி இளம்பெண் பிரியதர்ஷினி, மணமேடைக்கு போன பின்னரும்- தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் என் காதலன் நிச்சயம் வருவான்.. அவன் என்னை அழைத்துச் செல்ல வருவான்.. அவனுக்காக 1 மணிநேரம் காத்திருங்கள் என சபதம் போட்டு தமிழகத்தையே பரபரப்பாக்கினார். மணமகனும் மேடையைவிட்டு கீழே இறங்க திருமணம் நின்று போனது.

ஆனால் காதலியிடம் சொன்னபடி மணமகன் வரவே இல்லையாம். பல மணிநேரம் காத்திருந்ததுதான் வீண். இதனால் இளம்பெண் பிரியதர்ஷனி இப்போது வீட்டை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறாராம்.

அத்தனை வைராக்கியத்துடன் மேடையில் எனக்காக அவன் வருவான் என அறிவித்த பிரியதர்ஷிணி இப்போது சும்மா அழுது கொண்டிருக்கவில்லை. தன்னிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வராமல் போய்விட்ட சென்னை காதலனைத் தேடி பேருந்து ஏறிவிட்டாராம்.

அந்த கிழக்கே போகும் ரயில் பாஞ்சாலி, பரஞ்சோதியின் கரம்பிடிக்க ஊரார் துரத்த துரத்த மூச்சுவாங்க ஓடி ரயில் ஏறினாள்… இந்த ஊட்டி பாஞ்சாலியின் சபதம் என்னவாகுமோ? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பிரியதர்ஷ்ணி.

Related Posts

Leave a Comment