எம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ!

by Web Team
0 comment

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய தமிழிசை சௌந்தரராஜன் அதன்பிறகு பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழக பாஜகவின் தலைவராக பல்வேறு சமயங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களுக்கான பதிலை தெளிவாகக் கூறி அசராமல் வலம்வந்தார்.

அந்த வகையில் தமிழிசையின் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு நிறைவடையும் நிலையில் அவருக்கு தெலுங்கானா ஆளுநராக பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கானா ஆளுநராக மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், எனது திருமண புகைப்படங்களை அனுப்பிய தமிழக நண்பர்களுக்கு நன்றி. என் திருமணத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சுதந்திர போராட்ட வீரர் ம.பொ.சி உள்ளிட்டோர் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment