சாப்பாட்டில் ஏற்பட்ட பூகம்பம்… பல்டி அடித்த அர்ச்சனா! குறும்படத்தில் அம்பலமாகும் உண்மை

by Web Team
0 comment

நேற்று பிக்பாஸ் வீட்டில் தீயாய் ஆரி பெர்பாமன்ஸ் காட்டி விட்டார். பாலாஜி டான்ஸ் ஆடுவதில்லை, அர்ச்சனா எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என நினைக்கிறார் என வெளுத்து வாங்கி விட்டார். அவரை ஜெயிலுக்கு அனுப்பி வைத்த பின்னரும் கூட இந்த பிரச்சினை ஓயவில்லை. குரூப், குரூப்பாக வந்து சண்டை போட்டு சென்றனர்.

கிச்சனில் சாப்பாடு பரிமாறிய ஆரி, ஆஜீத் தட்டில் கொஞ்சம் பொங்கல் வைத்து விட்டு இன்னும் கொஞ்சம் வைக்கட்டா? என்பது போல கேட்டார். பதிலுக்கு அருகில் இருந்த சோம் வச்சு விடுப்பா என்பது போல சொல்ல ஆரி இன்னும் கொஞ்சம் பொங்கலை அவரது தட்டில் வைத்தார். ஆரி பரிமாறியதை கவனித்தும் கூட அர்ச்சனா அருகில் வந்து தானே பரிமாற ஆரம்பித்தார்.

இதை ஆரி ஜெயிலில் இருந்தபோது மீண்டும் சுட்டிக்காட்ட நேராக டைனிங் ஹாலுக்கு சென்ற அர்ச்சனா, ஆஜீத் உட்பட அங்கிருந்த அனைவரிடமும் ஆஜீத் எவ்வளவு சாப்பிடுகிறான் என்பதை ஆரி கணக்கெடுப்பதாக மாற்றி சொல்லி விட்டார். இதையடுத்து இந்த பிரச்சினை மீண்டும் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.

அர்ச்சனாவின் இந்த வாக்குமூலத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் இதுக்கு ஒரு குறும்படம் போடுங்க பிக்பாஸ் என கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்தியளவில் ஆரியின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment