நண்பா.. நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல: வைரலாகும் திருமண பேனர்

by Web Team
0 comment

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தினாலும், சிலருக்கு எப்போதுமே வேடிக்கைதான். அந்த வகையில் முள்ளுவாடி நண்பரின் கல்யாண பேனர் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகியுள்ளது.

முள்ளுவாடி பகுதியில் ஆசிரியராக உள்ள பாலமுருகன் என்பவருக்கு திருமணம். அவரின் நண்பரின் திருமணத்துக்காக நண்பர் சேர்ந்து புதுமையான பேனர் ஒன்றை அடித்துள்ளனர்.

அந்த பேனரில் கொலை வெறி கொரோனா குருப்ஸ் என குறிப்பிட்டு ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னும் சானிடைசர் சபரி, விலகி இரு விக்னேஷ், பாசிடிவ் பாண்டி, கோவிட் கோபி, அச்சுறுத்தும் அருண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வாழ்த்து செய்தி தான் தரமான சம்பவம் எனக் கூற வேண்டும், நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது என நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர் இணைய வாசிகள்..

Related Posts

Leave a Comment