அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்குப்பெட்டியில் இடம்பெற்ற செந்தமிழ்

by Web Team
0 comment

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டியில் செந்தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அமெரிக்கா வாழ் தமிழர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் பெரும்பாலான அமெரிக்கா வாழ் தமிழர்கள் தற்போதைய அதிபரான டிரம்ப் அவர்களுக்கு எதிராகவே உள்ளனர்.இதனால் இவர்களின் ஆதரவு பெரிதும் ஜோ பீடன் அவர்களுக்கு தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் அந்தந்த மாகாணங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச்செல்லும் பணி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கலிபோர்னியாவில் சாண்டா கிளாரியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டியில் தமிழில் இடம்பெற்ற அறிவிப்புகள் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளன.

அந்த வாக்குப்பெட்டியில் தமிழில் இருந்த அறிவிப்பு என்னவென்றால் வாக்கு சீட்டை எங்கு போடவேண்டும் என்ற அறிவிப்பு தான் இடம்பெற்றிருந்ததது.தமிழகத்தில் தற்போது மும்மொழி கொலைகயைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும் சமயத்தில் அமெரிக்காவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது உலக தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment