சென்னையில் பிரசவத்தின் போது வலி ஏற்படும் என்ற அச்சத்தால் 5 மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் கார்பெண்டரான ஐவரும் சுஷ்மிதா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தற்போது சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் பிரசவித்த சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார் சுஷ்மிதா அப்போது உறவினர்கள் பிரசவத்தின் பொது இது போன்ற வழிகள் இருக்கத்தான் செய்யும் என ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால் பிரசவ வலிக்கு பயந்துபோன சுஷ்மிதா சம்பவத்தன்று அருகில் இருந்த தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து கொண்டுள்ளார், இதில் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அங்கு சுஷ்மிதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.