தீயாக பரவிய சம்பவம்! உண்மையில் நடந்தது என்ன! வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் போட்டியாளர்!

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 மூன்றாவது கட்ட வெளியேற்று படலத்தை எட்டியுள்ளது. இவ்வார இறுதியில் வெளியேறப்போவது யார் என்பது, இவர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போகிறார் என்ற கணிப்பும் நிகழ்ந்து வருகிறது.

கடந்த வாரங்களில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா Wild Card சுற்று மூலம் போட்டியாளராக வந்தார். இதே போல ஆர்.ஜே மற்றும் பாடகி சுசித்ராவும் இவ்வாரத்தில் போட்டியாளராக வரப்போகிறார் அவர் கொரோனா பரிசோதனைக்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் யாரோ என்ன கொலை செய்ய வருகிறார் என கூறி அலறி அடித்து இரவில் விடுதி அறையை விட்டு ஓடி வந்ததாகவும், பின் பிக்பாஸ் மற்றும் விடுதி நிர்வாகம் அவரை சரிப்படுத்தி அனுப்பியதாகவும் தகவல்கள் தீயாக பரவின.

இந்நிலையில் பாடகி சுசித்ரா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அறையில் நான் பயந்துவிட்டதாகவும் வெளியே நடமாடியதாகவும் வந்த செய்திகளை நம்ப வேண்டாம், நான் பாதுக்காப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். இதுபோல ஒரு காட்சி எனது அறையில் இருந்து கிடைக்கும் போது யார் புகார் செய்வார்கள் என்று தன்னுடைய விடுதி அறை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment