6 மாதமாக ஒரு கொரோனா தொற்று கூட இல்லை; எப்படி இந்த நாடு சாதித்து காட்டியது தெரியுமா?

by News Editor
0 comment

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்று வரை பரவி கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், தற்போது மக்கள் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஒரு சில கட்டுபாடுகள் இன்றி தளர்வுகளும் விடுவிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற முன்னேறிய நாடுகளையெ கொரோனா ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.

ஆனால், ஒரு குட்டி நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அந்த நாடு தைவான் தான்.

தைவானில், இதுவரை வெறும் 533 பேர் மட்டுமே அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவரை ஒரு கொரோனா தொற்றுக் கூட பதிவாகவில்லையாம்.

இதற்கு முக்கிய காரணமே கொரோனா பரவல் அதிகமான போது அந்த நாடு எல்லைகளை மூடி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தானாம்.

Related Posts

Leave a Comment