அனிதா சும்மா இருந்தாலும் இவ ஏத்தி விடுறா.. சம்யுக்தா மற்றும் சனம் இடையே வெடித்த பிரச்சினை

by News Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது பல்வேறு விதமான சண்டைகள், சச்சரவுகள், பாசங்கள் என்று பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

மேலும், ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.

அதிலும் அர்ச்சனா வந்த பின்னர் பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் அரங்கேறி விட்டது.

இந்நிலையில், நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சோக கதையை கூறி வந்தனர்.

அதிலும். அனிதா சம்பத் சொன்ன நீள சோக கதையை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கியதுடன், சம்யுக்தாவே போதும் அனிதா என்று நிறுத்திவிட்டார்.

இதனையடுத்து, தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், அனிதாவே கூலாக இருக்கிறார். ஆனால் இந்த சனம் ஏத்தி ஏத்தி விட்றா பாரு என சிரித்தப்படியே கேட்கிறார்.

இதனால், சம்யுக்தா மற்றும் அனிதா இடையே பிரச்சினை வெடிக்க தொடங்கியுள்ளது.

Related Posts

Leave a Comment