பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவன் இவன் தான்! முதன் முறையாக வெளியான புகைப்படம்

by News Editor
0 comment

பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரான்சின் நைஸ் நகரில் தேவாலயத்தில் நுழைந்த நபர், திடீரென்று நடத்திய கத்தி குத்து தாக்குதல் காரணமாக மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், உயிரிழந்த 45 வயது மதிக்கத்தக்க வின்சென்ட் லோக்ஸ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார். மற்ற இரண்டு பேர் பெண், அதில் ஒருவர் தொண்டையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.

மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், தேவாலயத்திற்குள் நுழைந்து குறித்த நபரை சுட்டுப் பிடித்தனர்.

Credit: AFP or licensors

அதன் பின் பிரன்ஸ் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் தாரி 21 வயது மதிக்கத்தக்க வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவை சேர்ந்தவன், Brahim Aoussaoui என்று அறியப்படும் அவன் 12 அங்குல நீளமுள்ள கத்தியை பயன்படுத்தியுள்ளான்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பிறந்த இவர், கடந்த 9-ஆம் திகதி இத்தாலியில் இருந்து பிரான்சிற்கு வந்துள்ளான். அதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் திகதி இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு சென்று, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, நாட்கள் முடிந்த பின்னர் வெளியேறியுள்ளான்

Brahim Aoussaoui(thesun)

குறித்த தாக்குதல் தாரியை உள்ளே நுழைந்தவுடன் பொலிசார் சுமார் 14 முறை நடத்திய துப்பாக்கிய சுட்டு, அதன் பின் அவரை பிடித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Credit: supplied by Pixel8000

Related Posts

Leave a Comment