தாய்-மகள் இருவரையும் காதலித்த நபர்….தவறை மறைக்க அடுத்தடுத்து செய்த கொடூர செயல்

by News Editor
0 comment

தாய்-மகள் இருவரையும் காதலித்துவிட்டு தவறை மறைப்பதற்காக அடுத்தடுத்து 9 கொலைகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மசூத் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் தனது குடும்பத்துடன் 20 ஆண்டுகளாக வாரங்கல் கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்,அப்போது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிஷாவின் அக்கா மகள் ரபிக்கா தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார்.அவர் வாரங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார்,அந்த சமயத்தில் சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு வந்தார்,நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது இதனால் ரபிக்கா தனது குழந்தைகளுடன் சஞ்சய் குமாருடன் திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே சஞ்சய் குமாருக்கும் ரபிக்காவின் 16 வயது மகளுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த, ’ரபிகா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல’ என்று எச்சரித்துள்ளார்.

இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருந்த ரபிகாவை கொல்ல திட்டமிட்டு கடந்த மார்ச் 7ம் தேதி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ரபிகாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்து அவரை ரயிலில் இருந்து தாலி கொலை செய்துள்ளார்.இதனையடுத்து ரபிக்கா காணாததை அடுத்து நிஷா சஞ்சய் குமாரிடம் கேட்டுள்ளார் அதற்கு அவர் பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த நிஷா போலீசில் புகார் தெரிவிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் – நிஷா குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் மொத்தமாகக் கொலை செய்யத் திட்டமிட்டான் சஞ்சய்.இந்த மசூத் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அரங்கேற்றினர்.அப்போது குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்துள்ளான்.

அதன் பிறகு மயங்கிய நிலையில் கிடந்த அனைவரையும் ஒரு கோணிப்பையில் கட்டி அருகில் இருந்த கிணற்றில் போட்டு கொன்றுள்ளான்.சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து ரயில்வே போலீசாரும் சஞ்சய் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

ஒரு கொலையை மறைக்க 10 கொலைகளை செய்த நபரின் இந்த அதிர்ச்சி செயல் அனைவரையும் திகைக்கவைத்தது.

Related Posts

Leave a Comment