வழக்கமாக, மாதந்தோறும் ஒரு பவுர்ணமி, ஒரு அமாவாசை ஏற்படும். எப்போதாவதுதான் ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வரும். அந்த இரண்டாவது பவுர்ணமி, ‘புளூ மூன்’ என்று சொல்லப்படும். அதாவது, நீல நிற நிலா என அழைக்கப்படும்.
இது, நீல நிறத்தில் தெரியாது. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்படுகிறது.
இது குறித்து கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்சிபயே கூறுகையில்,
அக்டோபர் 1-ம் தேதி பவுர்ணமி வந்தது. இரண்டாவது பவுர்ணமி அக்., 31 இரவு, 8:19 மணிக்கு தோன்றுகிறது. நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகும்.
கூடுதல் நேரத்தைச் சேர்க்கும் போது, ஒவ்வொரு, 30 மாதங்களுக்கு ஒருமுறை, ‘நீல நிலா’ நிகழ்வு ஏற்படும். பிப்ரவரியில், 28 அல்லது 29 நாட்கள் என்பதால் வாய்ப்பே இல்லை. அடுத்த நீல நிலா, 2023 ஆக., 31ல் ஏற்படும். கடைசி ப்ளூ மூன் மார்ச் 31, 2018 அன்று தோன்றியது என்றார்.