கொரோனா பரவலால் அரசியல் அறிவிப்பு தள்ளி போகிறது. ரஜினியின் சகோதரர் தகவல்

by News Editor
0 comment

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரியவரும் என ரஜினியின் சகாதரரான சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் கடிதம் ஒன்று வைரலானது. அதில் ரஜினியின் உடல்நலம் குறித்தும், அரசியல் நிலைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்தும் இடம்பெற்றிருந்தன.

கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்.

எனவே கொரோனா பாதிப்பு காரணமாக தான் அவர் அரசியல் ரீதியான எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல், நிர்வாகிகள் சந்திப்பு நடத்தாமல் இருப்பதாக தகவல் வெளிவந்தன.

இந்நிலையில் அந்த கடிதம் நான் எழுதவில்லை என நேற்று ரஜினி விளக்கம் அளித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

 

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி தீவிரமாகவும், உறுதியாகவும் இருந்தார். கொரோனாவால் கட்சியின் பெயர், கொடி, கொள்கை போன்றவற்றை அறிவிப்பதில் தாமதம் வந்தது.

கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரியவரும் என அறிவித்துள்ளார்.

 

Related Posts

Leave a Comment