மறைந்த நண்பரின் கனவை நிறைவேற்றிய நடிகர் சந்தானம்

by News Editor
0 comment

மறைந்த தனது நண்பர் சேதுராமனின் மருத்துவமனையை திறந்து வைத்தார் நடிகர் சந்தானம்.

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகரும் மருத்துவருமான சேதுராமன்.

இவர் கடந்த மார்ச் மாதத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவருக்கு உமா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சேதுராமன் உயிருடன் இருந்தபோது இ.சி.ஆர் பகுதியில் ஒரு மருத்துவமனை கட்டிவந்தார்.

அதன் பணிகள் தற்போது முடிந்து அந்த மருத்துவமனையை நடிகரும் சேதுராமனின் நண்பருமான சந்தானம் திறந்து வைத்தார்.

மேலும் சேதுராமனின் உருவப்படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நட்பின் அடையாளமாக மருத்துவமனையை திறந்து வைத்த நடிகர் சந்தானத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Posts

Leave a Comment