பீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்… கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்

by News Editor
0 comment

தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை யார் என்றால் அது வனிதா விஜயகுமார் தான்.

தனி ஆளாக நின்று தனது இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதை பிக்பாஸில் அவதானித்த பின்பு ரசிகர்கள் அனைவரும் இவரது பாசத்திற்கு தலைவணங்கினர்.

அதன் பின்பு தனது மூன்றாவது திருமணத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். மேலும் தனது கணவருக்காக பலரையும் இவர் பகைத்து வந்தார்.

இவர்களின் திருமண வாழ்க்கை சில மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், வனிதா தனது மூன்றாவது கணவர் பீட்டரை பிரிந்துவிட்டதாக அறிவித்தார். அதற்கான காரணத்தினை நீண்ட காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மறுபடியும் அந்த துக்கத்தில் இருந்து மீண்ட வனிதா பல நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றார். இந்நிலையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகின்றார்.
இந்நிகழ்ச்சியில் அட்டகாசமான மேக்கப்பில் வித்தியாசமான உடையில் வரும் இவரிடம் ஈரோடு மகேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
இதற்கு கலக்கப்போவது யாரு பாலா கிண்டலாக வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை நுழைத்து பதிலைக் கூறியுள்ளார்.

கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அவர் கூறிய பதிலால் கோபத்தில் ஆழ்ந்த வனிதா அவரை சரமாரியாக திட்டியுள்ளார். இந்த ப்ரொமோ காட்சியினை அவதானித்த ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும்? என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment