பிரான்ஸில் 2வது முழு ஊரடங்கு அமல்! மக்கள் இதற்கு மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

by Web Team
0 comment

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நவம்பர் இறுதி வரை இரண்டாவது தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா தினசரி இறப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. செவ்வாயன்று, 33,000 புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டன.

புதிய நடவடிக்கைகளின் கீழ், வெள்ளிக்கிழமை முதல் மக்கள் அத்தியாவசிய வேலை அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என மக்ரோன் கூறினார்.

உணவகங்கள் மற்றும் பார்கள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும், ஆனால் பள்ளிகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும் என அறிவித்தார்.

இரண்டாவது அலையால் நாட்டில் நெருக்கடி அதிகரிக்கும், இது முதல் அலையை விட கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சை படுக்கைகளிலும் பாதி கொரோனா நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பொது சேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் திறந்த நிலையில் இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார், பொருளாதாரம் நிறுத்தப்படக்கூடாது அல்லது வீழ்ச்சியடையக்கூடாது என்றும் மக்ரோன் கூறினார்.

Related Posts

Leave a Comment