பாலா ஷிவானி இடையே பற்றி கொண்ட காதல்.. வெளியான வீடியோவால் கதறும் ரசிகர்கள்

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆனது மூன்று வாரத்தை நிறைவு செய்துள்ளது. ஆனாலும் போட்டியாளர்களிடையே சிறிய சிறிய சண்டைகள் மட்டுமே அரங்கேறி அடுத்த சில மணிநேரத்திலேயே சமாதானம் ஆகிவிடுகின்றனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் போட்டியாக விளையாடமல் ஏதோ பாண்டவர் பூமி பட குடும்பம் போல் அக்கா அண்ணா தங்கை அம்மா என குடும்பமாக சென்டிமென்ட்டை தூக்கலாக வைத்து ரசிகர்களை வெறுப்போத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், பாலா ஷிவானியை எங்கே சென்றாலும் கூடவே குடை பிடித்து வரவேண்டும் என கூறி காதலை வெளிக்காட்டி வருகிறார்.

அந்த ப்ரோமோ காட்சியிலும், ஷிவானி பாலாவை காதலிப்பது போல், பின்னணியில் காதல் பாடலை எல்லாம் ஓட விட்டு வருகின்றனர். இதைக்கண்ட ரசிகர்கள் என்னாட இது பிக்பாஸ் வீடா இல்லை இது பாண்டவர் பூமி படமா என விமர்ச்சித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment