பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

by Web Team
0 comment

தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பா.ஜனதாவின் மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
வானதி சீனிவாசன்
தமிழகத்தின் பா.ஜனதா தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் வானதி சீனிவாசன். இவர் பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நியமிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment