விவேக் சார் நீங்களா? ஸ்டைலா சும்மா வேற லெவெலில் மாஸ் காட்டும் விவேக்!

by Web Team
0 comment

நடிகர் விவேக்கின் செம ஸ்டைலிஷ் ஆன போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக ஹீரோ அல்லாத நடிகர்களும் அதிகளவில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். சென்ட்ராயன், சாண்டி மாஸ்டர், சாய் தீனா உள்ளிட்ட நடிகர்களும் வித்தியாசமான முறையில் ஸ்டைலிஷ் ஆக போட்டோஷூட் நடத்தி போட்டோக்கள் வெளியிட்டனர்.

அந்த வகையில் தற்போது விவேக்கும் இணைந்துள்ளார். வைட் அண்ட் வைட் காஸ்டியூமில் கெத்தான லுக்கில் விவேக் காணப்படும் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விவேக் காமெடி நடிகராக மட்டுமின்றி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த போட்டோஷூட்டைப் பார்க்கும் போது விவேக் ஒரு தரமான ஹீரோ மெட்டிரியல் என்றே சொல்லலாம். இல்லை அரவிந்த் சாமி மாதிரி சாக்லேட் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக இருப்பார்.

இயக்குனர்களே ஸ்டைலிஷ் ஆன சின்னக் கலைவாணரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Related Posts

Leave a Comment