திருமணத்திற்கு மறுத்த பிரபல நடிகை… கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப் ஆன தயாரிப்பாளர்

by Web Team
0 comment

பிரபல நடிகை கல்யாணத்திற்கு மறுத்ததால், அவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் மால்வி மல்ஹோத்ரா. தொலைக்காட்சியில் அறிமுகமாகி பிரபலமான இவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் ஹோட்டல் மிலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் இரவில் நடிகையின் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் யோகேஷ் சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் நிராகரிப்பதற்கு காரணத்தை கேட்டுள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றவே, அவர் கத்தியால் மால்வியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மால்வி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். மேலும் காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யோகேஷ் – மால்வி இடையே நட்பு இருந்து வந்ததாகவும், இப்போது திருமணத்திற்கு அவர் நிராகரித்த காரணத்தால் யோகேஷ் இப்படி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment