அடுத்து ஆண்டு சென்னை அணியின் கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் சிஇஓ முக்கிய தகவல்

by Web Team
0 comment

2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இதை தொடர்ந்து, 2020 ஐபிஎல் தொடரில் டோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் சென்னை அணிக்கு டோனி தொடர்ந்து விளையாடுவாரா என கேள்வி எழுந்த நிலையில் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிச்சயமாக, 2021 ஆம் ஆண்டில் டோனி சிஎஸ்கே-வை வழிநடத்துவார் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

ஐபிஎல் போட்டியில் அவர் எங்களுக்கு மூன்று பட்டங்களை வென்று தந்துள்ளார். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத முதல் ஆண்டு இது.

ஒரு மோசமான ஆண்டால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தமில்லை என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment