லண்டனில் இரவு சாலையில் நடந்து சென்ற அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! போதை இளைஞரால் விபரீதம்

by Web Team
0 comment

லண்டனில் இரவு சாலையில் நடந்து சென்ற போது வேகமாக சென்ற கார் மோதி உயிரிழந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Suttonல் Rhiannon Hall (21) என்ற இளம்பெண் கடந்த 16ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த கார் Rhiannon மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட Rhiannon சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மீது காரை மோதிய ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் பின்னர் பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர் மது போதையில் கார் ஓட்டினார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment