பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்றைக்கான ப்ரோமோ காட்சிகளில் நவராத்திரியை போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நான்கு மணிநேரம் இன்றைக்கான ஷோ ஒளிப்பரப்படும் என ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு சீசனின் போதும் பிக்பாஸில் காதல் மலர்வதை பார்த்திருப்போம்.
ஆனால், இந்த சீசன் ஆரம்பித்து இரண்டு வாரங்களை கடந்து அப்படி யாரும் ஏதுவும் செய்யாததுபோலவே இருந்து வந்தனர். ஆனால் ஏற்கனவே ஒரு ப்ரோமோ காட்சியில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி இடையே காதல் மலர்ந்ததுபோல் பாடலுடன் வெளியிட்டு இருந்தனர்.
ஆனால், தற்போது நிகழ்ச்சியின் போது, கேப்ரில்லா பாலாஜியை பார்த்து நீ யாரை காதலிக்கிறாய் எனக்கு தெரியும் என சொல்லி, ஆஜித்திடம் கூறுகிறார்.
அதற்கு, ஆஜித் யாரு ஷிவானியா என கூற இல்லை என பாலாஜி விளையாட்டை கூறுகிறார். அப்போ கேபியா என சொல்ல அவ எனக்கு தங்கச்சி என சொல்கிறார்.
அதன் பின், தங்கச்சி எனக் கூற அப்படி கூப்பிடாத எனக்கு பிடிக்கல என கூறுகிறார் கேப்ரில்லா.
இதனால் கேப்ரில்லா மனதில் பாலாவின் மீது காதல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பாலாவும் விளையாட்டுக்குத்தான் தங்கச்சி என கூறுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்படியும் இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Yesterday pic.twitter.com/5vYa4koaak
— Mohammed Aziz (@iaziz07) October 25, 2020