திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் மணமக்களுக்கு ஏன் முதலில் பால், பழம் தர்றாங்க தெரியுமா? தமிழர்களின் ரகசியம்

by News Editor
0 comment

புதிதாக திருமணம் நடந்து முடிந்ததும் திருமணம் ஆன புதுமண தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து வந்ததும் அவர்களுக்கு முதலில் ஒரு டம்ளர் பாலும் பழமும் கொடுப்பது தமிழர்களின் வழக்கம்.

தமிழர்களை பொறுத்தவரையில் திருமணச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதற்காக பால் பழம் கொடுக்கும் வழக்கத்தினை எம்முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். இதற்கான காரணம் என்ன?

மணப்பெண்

ஒரு பெண் தான் பிறந்து வளர்ந்த சூழலை விட்டுவிட்டு தான் மணம் முடிக்கும் ஆணின் குடும்பத்துக்கு புதுவிதமான சூழலில் வந்து வாழ வேண்டிய சூழலில் இருக்கிறாள். கணவன் வீட்டாரின் சூழலில் சொல்லப்படும் சில வார்த்தைகள் மற்றும் உறவினர்களின் கிண்டல்கள் ஆகியவற்ளைக் கேட்டு, புது சூழலில் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. அதனால் சில பெண்கள் பயந்தும் விடுவார்கள்.

பசுவின் பால்

ஒரு பசு மாடானது விஷத்தையே சாப்பிட்டாலும் கூட தான் தருகின்ற பாலில் துளி கூட எப்படி விஷம் இல்லாமல் சுத்தமா இருக்குமோ அதுபோன்று கணவன் வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்குத் தீமையே நேர்ந்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை நீ ஒருபோதும் கொட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் பால் கொடுக்கப்பகிறது.

பழம்

அதேபோலத் தான் வாழைப்பழம் கொடுப்பதற்குப் பின்பாகவும் ஒரு சிறு பின்னணி உண்டு.

வாழைப்பழத்தில் எப்படி அடுத்த சந்ததியை உண்டாக்குவதற்கான விதை இல்லாமல் இருந்தாலும் மூலமரத்தைச் சார்ந்து அது அடுத்த தலைமுறை வாழைக் கன்றைத் தருகிறதோ அதுபோல கணவனைச் சார்ந்து வம்ச விருத்தியைத் தர வேண்டும் என்பதைக் குறிப்பது தான் இந்த வாழைப்பழம்.

பால் கொடுப்பது

ஆணே இந்த பாலில் எப்படி தயிரும் நெய்யும் அடங்கியிருக்கிறதோ அதேபோல இந்த பெண்ணுக்குள்ளும் அறிவும் ஆற்றலும் நிரம்பியிருக்கிறது.

அதை பக்குவமாக உறையிட்டு, பக்குவமாகக் கடைந்து வெண்ணெய், நெய்யை உருக்கி எடுக்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும், பாலை கெட வைத்துவிடாதே என்பதை ஆணுக்கு உணர்த்துவதற்காகத் தான் மணமகனுக்கு பால் கொடுக்கப்படுகிறது.

வாழைப்பழம்

வாழைக்கன்றை எப்படி அதனுடைய தாய் மரத்தின் அடியில் உள்ள நிழலில் இருந்து பக்குவமாக பிரித்து எடுத்து, அதை வேறு இடத்தில் சென்று நடுகிறோமோ அதுபோல, அந்த பெண்ணை அவளுடைய வீட்டில் இருந்து பிரித்து உன்னுடைய வீட்டில் நடுகின்றோம். அதிலிருந்து பக்குவமாக வளர்த்தெடுத்து உன்னுடைய சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்வது உன்னுடைய பொறுப்பு. அது உன்னுடைய கையில்தான் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காகத் தான் இந்த வாழைப்பழம் மணமகனுக்குக் கொடுக்கப்படுகிறது.

நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் சம்பிரதாயத்துக்கும் சடங்குகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு முக்கியமான காரணம் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானது. நம் வாழ்வும் நிச்சயம் சிறக்கும்.

Related Posts

Leave a Comment