தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜை

by Web Team
0 comment

தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட கூத்தனுர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
சரஸ்வதி பூஜையை ஒட்டி திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கலை தெய்வமான சரஸ்வதியை வழிபட்டால் கல்வி ஞானம், கலைஞானம் பெருகும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இன்று சரஸ்வதி பூஜை நடைபெறும் நிலையில்,
திருவாரூர் அருகே உள்ள கூத்தனூர் ஒட்டக்கூத்தரால் வழிபாடு செய்யப்பட்ட பழமை வாய்ந்த கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில். சரஸ்வதி பூஜையை ஒட்டி இன்று காலை சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சரஸ்வதி அம்மனின் பாத தரிசனம் நடைபெற்றது. சரஸ்வதி அம்மனுக்கு வெண்பட்டு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சரஸ்வதி பூஜையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூத்தனூர் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கல்வி ஞானம் பெருக வேண்டும் என்பதற்காக பக்தர்கள் நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்களை வைத்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment