ஆத்மா சாந்தியடைய பரிகாரம்

by Lifestyle Editor
0 comment

கோ தானம் செய்வது சிறப்பான பலனைத்தரும். ஆச்சார, அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள, சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது. அவர்கள் குடும்பத்தில் – தாயோ, தந்தையோ இறந்து விட்டால் அவர்கள் ஞாபகார்த்தமாக ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய, அந்த பசு கறக்கும் பாலில் – அதிகாலையில் – அந்த கோசாலை அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கோ, பெருமாள் ஆலயத்திற்க்கோ அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து, போஷிப்பது அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும்.

அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே. பால் மட்டும் நாம் வாங்கி அபிஷேகத்திற்கு உபயோகிக்கலாம். சுமார் ஒரு வருடம், முதல் திதி கொடுக்கும் வரை மேற்படி முறையில் நாள் தவறாது இறைவனுக்கு பாலாபிசேகம் செய்வது சிறப்பு.

இதனால் இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வழி ஏற்படுகிறது. நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால், நீங்களும் செய்யலாமே கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து, யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம்.

இல்லை என்றால் பசு ஒன்றை இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுத்து பாலை மட்டும் வாங்கி அபிஷேகம் செய்யலாம்.

Related Posts

Leave a Comment