எம்எஸ் டோனி : எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது

by Editor
0 comment

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் நீக்கப்பட்டு மோனு குமார், சான்ட்னெர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் தோற்ற டோனி கூறும்போது ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதற்குக் காரணம் இந்த ஆடுகளம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை வைத்துதான் கூறுகிறேன். கூட்டி கழித்துப் பார்த்தால் (Mathematically) எங்களுக்கு இன்னும் பிளே ஆப்ஃஸ் வாய்ப்புள்ளது. இந்த சீசனை நாங்கள் எப்படி முடிக்கிறோம் என்பதை பற்றிதான் நீங்கள் நினைக்க வேண்டும்.

நாங்கள் நான்கு ஐந்து போட்டிகள் இருந்த போதிலும், நாங்கள்அந்த ஒரு போட்டியை மட்டுமே கணக்கில் எடுத்து விளயைாடுவோம். பாயின்ட் டேபிள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் அது தானாகவே கவனித்துக்கொள்ளும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பார்க்கிறோம். இன்று சான்ட்னெர், மோனு குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Related Posts

Leave a Comment