பாஜகவில் இணைவது தொடர்பாக நடிகை வனிதா தகவல்

by Editor
0 comment

சென்னை: பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். தந்தையுடன் தகராறு, கணவர் ஆகாஷுடன் மோதல், மகன் ஸ்ரீஹரிக்கு உரிமை கோரி போராட்டம், தாய் மஞ்சுளாவுடன் வாக்குவாதம் என 2000-களில் பிரபலமடைந்தார் வனிதா விஜயகுமார்.

இதையடுத்து ஆனந்த என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் எகிறியதே வனிதாவால்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பீட்டர் பால் என்பவரை லாக்டவுனின் போது திருமணம் செய்து கொண்ட வனிதா மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்தார்.

விவாகரத்து ஆகாத பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட வனிதாவை நடிகை கஸ்தூரி, குட்டி பத்மினி, இயக்குநர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் நிகழ்ந்த திருமணம் கசந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாக வனிதாவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி, குஷ்பு ஆகியோரை போல் நடிகை வனிதாவும் பாஜகவில் இணைவதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. அவர் இன்றைய தினம் இணைகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறுகையில் பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் பாஜகவில் இணைவது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்போது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

Related Posts

Leave a Comment