வானிலை மையம் அறிவிப்பு 48 மணி நேரத்துக்குள் 12 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது

by Lifestyle Editor
0 comment

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ந் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழைக்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment