பாக்ஸ் ஆஃபிசில் மாஸ் காட்டிய நம்பர் ஒன்! ஹீரோ!

by Lifestyle Editor
0 comment

இந்த வருடத்தின் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மட்டுமே இயல்பாக சென்றன. மார்ச் மாதம் யாரும் எதிர்பாராதளாவில் கொரோனா வந்து அனைவரையும் வீட்டிற்குள் முடக்கி போட்டுவிட்டது.

தொழில்கள் முடக்கமாகின. 4 மாத காலகட்டங்களுக்கு பின் அண்மையில் தளர்வுகளுடன் இயல்பு நிலை சற்று திரும்பினாலும் சினிமா வர்த்தகம் இன்னும் துளிர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

படப்பிடிப்பு ரத்து, தியேட்டர் மூடல் என பெரும் சிக்கல்கள்களால் பெரும் நஷ்டம் நிலவியது. இனி தான் தியேட்டர்கள் திறக்கப்படப்போகிறது என்றாலும் படங்கள் வெளியாவது கேள்விகுறியே. அப்படியே வந்தாலும் வசூலால் இழந்ததை மீட்க முடியுமா என்பது சந்தேகமே.

இந்நிலையில் கடந்த 2019 TPV மல்டிபிள்கஸ் திரையரங்கில் பிகில் தான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறதாம்.

அட்லீ இயக்கத்தில் இந்த பிகில் கடந்த வரும் ரூ 200 கோடிகளுக்கு மேல் உலகளவில் சாதனை செய்தது.

பிகில் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதால் பலரும் #1YrOfMegaBlockbusterBigil என டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment