பிகில் திரைப்படம் படைத்த வசூல் சாதனை

by Editor
0 comment

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சென்ற வருடம் வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் பிகில்.

தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு பின் மீண்டும் இணைந்த கூட்டணி மூன்றாவது முறையும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் இப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக வருமான வரித்துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் பிகில் திரைப்படம் மட்டுமே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றுடன் பிகில் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment