அதிர்ச்சி தகவல்.. சித்தி 2 சீரியல் நிறுத்தம்..

by Lifestyle Editor
0 comment

சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2.

நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு முக்கிய காரணமாக வெளியாகியுள்ள தகவல் :

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூட என்று பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

அப்போது நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ” பிரபல சன் ரைசஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் முத்தையா முரளிதரனை யாரும் கேள்வி கேட்ட வில்லை, ஆனால் விஜய் சேதுபதி மட்டும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கூடாதா” என பதிவிட்டிருந்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், சன் தொலைக்காட்சியின் கலாநிதி மாறன். நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டிருந்த இந்த டுவிட் கலாநிதி மாறனுக்கு எதிரானதாக இருந்ததால், சித்தி 2 சீரியலை விரைவில் நிறுத்திவிடுங்கள் என கூறிவிட்டதாம் சன் நெட்ஒர்க் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment