பாகிஸ்தானில் சாலை விபத்தில் எட்டு பேர் உயிர் இழப்பு

by Lifestyle Editor
0 comment
Accident, சாலை விபத்து
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் ஜீலம் மாவட்டத்தில் காரிப்வால் கிராமத்தில் லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.  இந்த விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த வேன் விபத்தில் சிக்கியது பற்றிய தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.  அவர்கள் பலியானோர் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து பற்றி அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி உஸ்மான் பஜ்தார் உயிரிழந்தோருக்கு வருத்தம் தெரிவித்ததுடன், நிர்வாகத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டார்.

Related Posts

Leave a Comment